உள்ளூர் செய்திகள்

தேசிய சித்த மருத்துவ மையம்: தமிழகத்தில் அமைக்க பிரதமருக்கு கடிதம்

சென்னை: தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என, பிரதமருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:உங்கள் தலைமையிலான மத்திய அரசு, இந்திய மருத்துவ முறைகளான, சித்தா, ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.மத்திய அரசு, தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்க உள்ளதை அறிந்தேன்.அதை நடப்பு நிதியாண்டு, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். சித்த மருத்துவ முறை உருவான தமிழகத்தில், தேசிய சித்த மருத்துவ மையம் அமைப்பது பொருத்தமாக இருக்கும். மையம் அமைக்க, நல்ல காற்று, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதியுடன், தேவையான நிலம், சென்னை அருகிலேயே, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, மத்திய அரசு கேட்கும் விபரங்களை அனுப்பி வைக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே, தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும்; சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு, முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்