பி.டெக்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்புமா: பொறியியல் கல்லூரிகள் கலக்கம்
புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர 4,646 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், தனியார்பொறியியல் கல்லுாரி நிர்வாகங்கள் பெரும் கலக்கத்தில் உள்ளன.புதுச்சேரியில் 17 தனியார் பொறியியல் கல்லுாரிகளும், இரண்டு அரசு பொறியியல் கல்லுாரிகள் இருந்தன. பொறியியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால், நான்கு கல்லுாரிகள் கலை அறிவியல் கல்லுாரிகளாக மாற்றப்பட்டு விட்டன. தற்போது, மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 15 பொறியியல் கல்லுாரிகள் மட்டுமே உள்ளன. இவற்றில், 13 தனியார் கல்லுாரிகளில் மொத்த முள்ள 6,264 பி.டெக்., இடங்களில் 50 சதவீதமான 3137 பி.டெக்., இடங்களை அரசுக்கு வழங்க முன்வந்துள்ளன.மேலும், இரு அரசு பொறியியல் கல்லுாரிகளில் 520 இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 3,657 இடங்கள் உள்ளன. இந்நிலையில், இந்தாண்டு, பொறியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர சென்டாக் மூலம் 5,068 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதில், 4,646 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்கப்பட்டுள்ளன. இவர்களில் 1000 பேர் ஜஸ்ட் பாஸ் நிலையில் உள்ளனர். அவர்களை தவிர்த்தால், விண்ணப்பித்த அனைவருக்கும் அரசு ஒதுக்கீட்டிலேயே பி.டெக்., சீட் கிடைக்கும் நிலை உள்ளது.சென்டாக்கில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அரசு ஒதுக்கீட்டிலேயே பி.டெக்., சீட் கிடைத்துவிடும் நிலை உள்ளதால், தனியார் பொறியியல் கல்லுாரிகள், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 3,137 இடங்களை எப்படி நிரப்புவது என புரியாமல் கலக்கம் அடைந்துள்ளன. இன்ஜினியரிங் படிப்பிற்கு வந்துள்ள விண்ணப்பங்கள் விபரம்பிரிவு----விண்ணப்பம்பொது--1214எம்.பி.சி.,-1264ஓ.பி.சி.,--1501எஸ்.சி.,-335எஸ்.டி.,-1முஸ்லீம்--147பழங்குடி---4மீனவர்--180தள்ளாட்டம் ஏன்பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு வேலை வாய்ப்பு எண்ணிக்கை புதுச்சேரியில் உயரவில்லை. பி.டெக்., படித்தாலும் வேலை உறுதியில்லை. தனியார் பொறியியல் கல்லுாரிகளில் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தாலும் சம்பளம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.ஐ.டி., துறை வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் வெறும் பொறியியல் படிப்பதால் மட்டுமே நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பொறியியல் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு கணித அறிவு, பயன்பாட்டு அறிவியல், பகுப்பாய்வு போன்ற திறன்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். படித்து முடித்த உடன் வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றால் நல்ல ஆங்கில மொழி திறமை, தொடர்பு திறன், தொழில் நுட்ப திறன்கள் இருக்க வேண்டும். இந்த திறன்கள் புதுச்சேரி மாணவர்களிடம் குறைவாக இருப்பதன் காரணமாகவே, இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் சேர்க்கையில் சரிவு ஏற்பட்டு தள்ளாட்டம் காண ஆரம்பித்துள்ளன.