உள்ளூர் செய்திகள்

இன்ஜி., சட்டம், வேளாண் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு?

சென்னை: மருத்துவ படிப்பிற்கு அளித்தது போல இன்ஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அரசு கமிட்டி ஆலோசனையை துவங்கியுள்ளது.இட ஒதுக்கீடுதமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் மிக குறைவாக இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில், நீதிபதி கலையரசன் தலைமையில் கமிட்டி அமைத்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கமிட்டி பரிந்துரைப் படி, &'நீட்&' தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டது.இதன்படி 2020- - 21ம் கல்வி ஆண்டில் 450 அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இதை பின்பற்றி, தி.மு.க., அரசும், அரசு பள்ளி மாணவர்களுக்காக, புதிய கமிட்டி அமைத்துள்ளது. மருத்துவம் மட்டுமின்றி, மற்ற தொழிற்கல்வி படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆய்வு நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கமிட்டி அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்த கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது. முடிவுஇதில், நீதிபதி முருகேசன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன், பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் லட்சுமி பிரியா பங்கேற்றனர்.இதில், ஒவ்வொரு துறை சார்ந்த படிப்புகளிலும், ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம் குறித்த தகவல்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை, மீன்வளம், இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களின் விகிதத்தை உயர்த்துவதற்கான கருத்துகளை, அந்தந்த துறை செயலர்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அரசு கல்லுாரிகள், பல்கலைகள் மட்டுமின்றி, தனியார் கல்லுாரிகள், பல்கலைகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பை போல், தனியாக இட ஒதுக்கீடு வழங்கலாமா அல்லது வேறு எந்த வழியை பின்பற்றலாம் என்ற ஆலோசனைகளை, பல்வேறு துறை நிபுணர்களிடம் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் இது குறித்து, கமிட்டி தலைவர் நீதிபதி முருகேசன் அளித்த பேட்டியில், &'&'முதல் கூட்டம் என்பதால், அதில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. &'&'அனைத்து தொழிற்கல்வி படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து, விரிவாக ஆய்வு செய்த பின்பே, உரிய முடிவுகள் எடுக்கப்படும்,&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்