உள்ளூர் செய்திகள்

கட் அடிக்கும் தலைமை ஆசிரியர்கள்: துவக்க கல்வி இயக்குனர் எச்சரிக்கை

தமிழக துவக்கப் பள்ளிகளில் பணிபுரியும் சில தலைமை ஆசிரியர்கள், பணி நேரத்தில் சொந்த வேலைக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். விடுமுறை எடுக்க விரும்பும் தலைமை ஆசிரியர்கள், விடுமுறை விண்ணப்பத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பாமல், பணி நேரத்திலேயே சொந்த வேலைகளை முடித்துக் கொள்வதாக, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தகவல் வந்துள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளியின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய சில உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களும் பணி நேரத்தில் சொந்த வேலையை கவனிக்க சென்று விடுவதுதான் காரணம். பெரும்பாலான துவக்கப்பள்ளிகள் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளதால், இது பற்றி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு தெரிவதில்லை. கோவை வந்த தமிழக தொடக்கக் கல்வி அலுவலர் தேவராஜன் இது பற்றி கூறியதாவது: தொடக்கப் பள்ளி நடவடிக்கைகளை சரியாக கண்காணிக்கும்படி அனைத்து உதவி கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. ஒரு உதவி கல்வி அலுவலர் மாதம் 40 பள்ளிகளை நேரில் பார்வையிட வேண்டும். ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, அவர்கள் அலுவலகத்துக்கே வர வேண்டியதில்லை என அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனாலும், குளறுபடிகள் நடக்கின்றன.பணி நேரத்தில் மாணவர் நலனில் அக்கறை செலுத்தாமல் சொந்த வேலையை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவராஜன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்