உள்ளூர் செய்திகள்

எழுத, படிக்க தெரிந்தால் போதும் சமுதாய கல்லூரியில் சேர வாய்ப்பு

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நாளை, தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வருகை தரும் முக்கிய அறிஞர்கள் மற்றும் வெளிநாடு அறிஞர்களை வரவேற்கும் விதத்தில் விழா நடத்தப்படும். பல்கலைக் கழகத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. ஜூன் மாதம் 3ம் தேதி திறக்கப்படவுள்ள இக்கட்டடத்தை, முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க வேண்டுகோள் விடுக்கவுள்ளோம். இங்கு, அண்ணாதுரை இருக்கை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த இருக்கையின் வாயிலாக அண்ணாதுரையின் படைப்புகள் தொடர்பான ஆய்வுகள், கருத்தரங்குகள் நடத்தப்படும். நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் இணைந்தவாறு புதிய படிப்பை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது.எங்களது பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சமுதாயக் கல்லூரிகளில் படிப்பவர்கள், கல்லூரிகளில், ரெகுலர் ஆக சேர்ந்து படிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. குறிப்பாக, எழுத, படிக்க தெரிந்த எவரும் சமுதாயக் கல்லூரிகளில் பயிலலாம். அங்கு ஆறு மாத படிப்பு காலம் முடிந்ததும், எங்களது பல்கலைக் கழகத்தில் அடுத்து ஆறு மாத காலம் படிக்கும் போது, 10ம் வகுப்பிற்கு இணையான கல்வித் தகுதியை பெற்று விடுவர். பின் பிளஸ் 1க்கு இணையான ஒரு வருட தொழிற்படிப்பும், பிளஸ் 2க்கு இணையான ஒரு வருட விருப்ப படிப்பு பெறுபவர்கள்.அதன் பின் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாக சேர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற முடியும். சமுதாயக் கல்லூரிகளில் இதுவரை 40 ஆயிரம் பேர் படிப்பை முடித்துள்ளனர். இந்த ஆண்டு 5,000 பேர் படிப்பை முடித்துள்ளனர். மேலும், புதிய எம்.பி.ஏ., கல்வி மையமும், மாணவர்களின் வசதிக்காக பெங்களூரில் கூடுதலாக ஒரு புதிய கல்வி மையமும் செயல்படவுள்ளது. புதிய தொழிற்கல்வி தொடர்பான டிப்ளமோ படிப்புகள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இயன்முறை இசை போன்ற தொழிற்கல்விகளை வழங்க உள்ளோம். எம்.எட்., சிறப்புக் கல்வி துவங்குவதற்கு தமிழகத்தில் முதன் முறையாக எங்களது பல்கலைக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.இவ்வாறு கல்யாணி அன்புச் செல்வன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்