சுந்தரனார் பல்கலை. தொலை தூர கல்வி: தேர்வு கட்டணம் கிடையாது
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலை தூர கல்வியில் எம்.பி.ஏ மேலாண்மை படிப்பு 2 ஆண்டுகளாகும். இதில் ஆறு பிரிவுகள் உள்ளன. நுழைவு தேர்வு கிடையாது. புரொபஷனல் எம்.பி.ஏ ஒரு ஆண்டில் பயிலலாம்.பட்ட மேற்படிப்பில் எம்.எஸ்சி இயற்பியல், வேதியியல், சுற்றுசூழல் கல்வி, கணிதம், உளவியல், சாப்ட்வேர் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளும், எம்.ஏ தமிழ், ஆங்கிலம், இந்தி, வரலாறு, கிரிமினாலஜி, பொது நிர்வாகம், தகவல் பரிமாற்றம் மற்றும் செய்தி பிரிவு, சுற்றுலாவியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், சமூகவியல், எம்.காம், கம்ப்யூட்டர் கல்வி உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.கம்ப்யூட்டர் பிரிவில் எம்.சி.ஏ 2 ஆண்டுகளாகும். பி.சி.ஏ படித்தவர்கள் மற்றும் பட்டப் படிப்புடன் பி.ஜி.டி.சி.ஏ படித்தவர்கள் சேரலாம். டிப்ளமோ படித்தவர்கள் பி.சி.ஏ 2 ஆண்டுகளில் பயிலலாம். பி.ஜி.டி.சி.ஏ டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் நேரடி சேர்க்கை நடக்கிறது. பட்டப் பிரிவில் பி.எஸ்சி கணிதம், உளவியல், பி.பி.ஏ, பி.பி.எம், பி.காம், பி.காம் கம்ப்யூட்டர், பி.ஏ தமிழ், பி.லிட், பி.ஏ ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், நூல் அறிவியல், இந்தி, இஸ்லாம், அராபிக் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் அட்மிஷன் நடந்து வருகிறது.பட்ட மேற்படிப்பு டிப்ளமோ பிரிவில் நுகர்வோர் உரிமைகள், மனித உரிமைகள், வரி காப்பீடு, ஏற்றுமதி, இந்தி, யோகா, ஆங்கில பயிற்சி, மியூசிக், ஆஸ்பத்திரி மேலாண்மை ஆகிய 14 பிரிவுகள் உள்ளன. டிப்ளமோ பிரிவில் 13 பாட பிரிவுகளும் மற்றும் சான்றிதழ் பாட பிரிவில் 9 பாட பிரிவுகள் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் ஸ்பாட் அட்மிஷன் நடந்து வருகிறது.ஏற்கனவே எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அனைத்து பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து கூடுதல் பட்ட மேற்படிப்பு (எம்.ஏ) ஒரு ஆண்டில் படிக்கலாம். ஏற்கனவே பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் பட்ட படிப்பு முடித்தவர்கள் அனைத்து பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து கூடுதல் பட்ட மேற்படிப்பு (பி.ஏ) ஒரு ஆண்டில் பயிலலாம்.கல்லூரி படிப்பை அல்லது தொலை தூர கல்வி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், அடுத்த ஆண்டிற்கான படிப்பை இங்கு தொடரலாம். இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. அட்மிஷன் மற்றும் மேலும் விபரங்களுக்கு நெல்லை ஜங்ஷன் மேம்பாலம் ஷிபா ஆஸ்பத்திரி அருகில் உள்ள யுவராஜ் அகாடமி நெல்லை கல்வி மையத்தை (0462 - 4020304, 94860 36701) அணுகலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.