உள்ளூர் செய்திகள்

மார்ச் மாத சம்பளம் இன்னும் போடல: பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்

கடலுார்: அதிகாரிகளின் அலட்சியத்தால், கடலுார் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்ளுக்கு மார்ச் மாத சம்பளம் போடவில்லை என புலம்புகின்றனர்.கடலுார் மாவட்டத்தில் 53 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, நிதியாண்டு துவக்கத்தில் மார்ச் மாத சம்பளம், ஏப்ரல் 2ம் தேதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு நேற்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை.பக்கத்து மாவட்டமான விழுப்புரத்தில் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் மட்டும் வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.மாதம் தோறும் 25ம் தேதி சம்பள பட்டியல் தயார் செய்து, 28ம் தேதிக்குள் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த முறை, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு வரவில்லை. அதனால், நாங்கள் கூறிய பிறகு, சம்பள பில் அனுப்புங்கள் என, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கு கருவூல அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது.இதன்காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர்களும் சம்பள பட்டியலை தாமதமாக அனுப்பியுள்ளனர். அதனால் மார்ச் மாத சம்பளம், இதுவரையில் கிடைக்காததற்கு காரணமாக கூறப்படுகிறது.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் காரணமாக கூறுகின்றனர். ஆசிரியர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக சம்பளம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்