ஒரே கல்விக்கொள்கையை பின்பற்றி கல்வி வாரியம் அமைக்க கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியத்திற்கும் ஒரே கல்விக்கொள்கையை பின்பற்றி, கல்வி வாரியத்தை அமைக்க வேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள் தமிழக அரசின் கல்வித்துறையின் கீழ் உள்ள பாடத்திட்டம், மத்திய அரசு கல்வி வாரியத்தின் சட்ட திட்டம் மற்றும் ஏனாம் பகுதி பள்ளிகள் ஆந்திர மாநில கல்வி வாரியத்தின் கீழும், மாகி பகுதி பள்ளிகள் கேரள மாநில கல்வி வாரியத்தின் கீழும் செயல்படுகின்றன.இதனால், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிலை சமநிலையில் இல்லை.ஆகையால், புதுச்சேரி அரசு கல்வித்துறை, நான்கு பிராந்தியத்திற்கும் ஒரே கல்விக்கொள்கையை பின்பற்றி கல்வி வாரியத்தை அமைத்து அனைத்து பகுதி மாணவர்களுக்கும் சமநிலை கல்வியை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.