உள்ளூர் செய்திகள்

வேலையை உதறித்தள்ளி விட்டு இளம்பெண் செய்த காரியம்; குவியும் பாராட்டு

பெங்களூரூ: மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் பெறும் உதறித் தள்ளி விட்டு, தனக்கு பிடித்த பேக்கரி தொழிலை தொடங்கிய பெண்ணின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.பெங்களூரூவைச் சேர்ந்த ஆஸ்மிதா என்பவர் தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆர்., (HR)ஆக பணியாற்றி வந்தார். ஆனால், அவருக்கு கேக், க்ரீம் உள்ளிட்டவை அடங்கிய பேக்ஸ் தொழிலில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. எனவே, இது தொடர்பாக தனது கணவர் சாகரிடம் கூறியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே, உடனே தான் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஹெச்.ஆர்., வேலையை ராஜினாமா செய்தார். பிறகு, தனக்கு பிடித்த பேக்ஸ் தொழிலில் மனநிறைவுடன் ஈடுபாடு காட்டி வருகிறார்.ஆஸ்மிதா செய்த ஒரு தயாரிப்பின் போட்டோவை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த சாகர், மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் பெறும் வேலையில் இருந்து விலகிய என்னுடைய மனைவி இதனை செய்து முடித்துள்ளார். கடவுளுக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார்.அவரது இந்தப் பதிவுக்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள், ஆஸ்மிதாவின் இந்த முடிவை வரவேற்கிறோம். நிச்சயம் அவர் ஒருநாள் வெற்றி பெறுவார் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்