உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா: கட்சியினர் செல்ல பள்ளி வாகனங்கள்

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலின் வருகையின் போது, கட்சியினரை அழைத்துச் செல்ல பள்ளி வாகனங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 22, 23ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.விழாவுக்காக பயனாளிகள் மற்றும் கட்சியினரை அழைத்துச் செல்ல, திருப்பூர் மாவட்டம் முழுவதும் பகுதிவாரியாக தனியார் பள்ளிகளிடமிருந்து வாகனங்கள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.இதற்காக, கல்வித்துறை, போக்குவரத்து துறை ஆகியன இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில், பகுதிவாரியாக கல்வி நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் விவரம் பெறப்பட்டு, பதிவெண் குறிப்பிட்டு அவற்றை விழாவுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது பயணத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது முதல்வர் வருகை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து நினைவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.பகுதிவாரியாக கட்சி நிர்வாகிகள் தொடர்பு எண் வழங்கப்பட்டு, உரிய வாகனங்கள் அந்தந்த நிர்வாகியின் அறிவுரைப்படி இந்நிகழ்ச்சிக்காக இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த பஸ்சை இயக்கும் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை அலர்ட் ஆக இருக்க வேண்டும். அவர்கள் மொபைல் போனை ஆக்டிவ் ஆக வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் எந்த வாகனம் எங்கு செல்ல வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்