உள்ளூர் செய்திகள்

அரசு வேலை பெற்ற ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் பயின்று அரசு வேலை பெற்ற 94 பேருக்கு பாராட்டு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர் குமார், செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனர். ஹெல்த் சயின்ஸ் முதல்வர் சரண்யாதேவி வரவேற்றார். இயக்குனர்கள் மனோபாலா, ஆனந்தராம்பாபு, நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வாழ்த்துரை வழங்கினர்.கல்லுாரியில் தாய்மை துணை செவிலியர் பயிற்சி முடித்து, கிராம சுகாதார செவிலியராக அரசு பணியில் சேர்ந்த 94 பேருக்கு நடந்த பாராட்டு விழா நடந்தது. அரசு வேலை பெற்றவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினர்.தொடர்ந்து, தற்போது தாய்மை துணை செவிலியராக பயிலும் மாணவர்களுக்காக ஒளியேற்று விழாவும், சுகாதார ஆய்வாளராக பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை நிற அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.உதவி பேராசிரியர்கள் மேகலை, லோகு, ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியை பவுலின் சங்கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்