அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை கால இலவச பயிற்சி
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு, கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம், செம்மஞ்சேரியில் நேற்று துவங்கியது.செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி சார்பில், ஆண்டுதோறும் கோடை கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான இலவச பயிற்சி முகாம், நேற்று செம்மஞ்சேரியில் உள்ள கல்லூரி வளாகத்தில் துவங்கியது. இதில், வாலிபால், கால்பந்து, பால்பேட்மின்டன் ஆகிய விளையாட்டு போட்டிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.முகாமில் பங்கேற்றுள்ள, சோழிங்கநல்லூர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு அனுபவம் உள்ள பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகாம் தொடர்ந்து, 20 நாட்கள் நடக்க உள்ளன என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.