உள்ளூர் செய்திகள்

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெறும் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026 - 27ம் கல்வியாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்க உள்ளது.இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் 17 வயது பூர்த்தியடைந்தவராகவும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயிற்சி கட்டணமாக ரூ. 20,750 ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.புதிய பாடத்திட்டத்தின் கீழ் இரண்டு பருவங்களாக வகுப்பு நடைபெறும். தமிழ் வழியில் தேர்வு நடத்தப்படும். இது குறித்து மேலும் விபரங்களை 04146 - 259467 மற்றும் 94425 63330 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்