உள்ளூர் செய்திகள்

அறிவே ஆயுதம்... தன்னம்பிக்கையே வெற்றி! பன்முக தகவல்களின் சுரங்கம் பட்டம் இதழ்

திருப்பூர்: 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி, திருப்பூர், ராம் நகர், ஸ்ரீ சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மாணவர்களின் அறிவுத் திறன், சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில், அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க 'பட்டம்' மாணவர் இதழ் வெளிவருகிறது. இதழை ஆர்வத்துடன் படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவிலான தகுதிச் சுற்றில் வாகை சூடும் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு, சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த, 160க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று, தங்களது பொது அறிவுத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்ட அளவில், பள்ளிகள் அளவிலான அரையிறுதி சுற்றுக்கான போட்டி நடந்து வருகிறது. அவ்வகையில், வினாடி வினா போட்டி, திருப்பூர், ராம் நகர், ஸ்ரீ சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 200 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், மாணவியர் ரேஷ்மிகா, ஷண்மிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பள்ளி முதல்வர் சுரேஷ்குமார், துணை முதல்வர் ஆகியோர் பதக்கம், சான்றிதழ் வழங்கினார். போட்டிக்கு, சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனங்கள் பரிசுப் பொருட்களை வழங்கும் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.பொது அறிவு வளர்கிறது'தினமலர்' பட்டம் இதழில், நிறைய பிரிவுகளில் பொது அறிவு சார்ந்த தகவல்கள் வருகிறது. பல்வேறு துறை சார்ந்த தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பாடம் சார்ந்தும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன்.- தர்ஷிகா, மாணவி.அறிவாற்றல் அதிகரிக்கும்கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். அந்தப் புத்தகத்தைத் தாண்டி நிறைய விஷயங்களைப் பட்டம்' இதழ் வாயிலாகக் கற்றுக் கொள்ள முடிகிறது. வினாடி - வினா மூலம் நிறைய அறிவாற்றல் வளர்க்கும் விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.- ஷண்மிகா, மாணவி.விரும்பி படிக்கின்றனர்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், தினமலர் 'பட்டம்' இதழ் வாங்கித் தருகிறோம். பெரும்பாலான மாணவர்கள் உணவு இடைவேளையின்போது ஆர்வதுடன் படிக்கின்றனர். தமிழ், கணிதம், அறிவியல் என அனைத்துப் பாடம் சார்ந்த விஷயங்களும் ஒவ்வொரு பக்கத்திலும் வருகின்றன. ஓவியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தகவல்களும் வருகின்றன. இதழ் வாங்கிய புதிதில், நாங்கள் படிக்கச் சொல்லி அறிவுறுத்தினோம்; தற்போது மாணவர்கள் தாங்களாகவே படித்து விடுகின்றனர். செய்தித்தாளுடன் மாணவர்களுக்கு பயனுள்ள பல தகவல்களும் இதில் நிறைய வருகின்றன.- சுரேஷ்குமார், பள்ளி முதல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்