சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமனம்
சென்னை: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, அனிதா நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ராஜேந்திரன் இருந்தார். இவர், சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, வேலூர் கல்வி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) முதன்மை கல்வி அலுவலராக இருந்த அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். மேலும், நான்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.