உள்ளூர் செய்திகள்

பள்ளி புத்தகங்களில் கமிஷன்; முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு: பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதிலும், 10 - 15 சதவீதம் கமிஷன் முறைகேடு நடக்கிறது. அச்சக உரிமையாளர்களிடம் கமிஷன் பெறுகின்றனர் என ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, தெரிவித்தார்.பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று அவர் கூறியதாவது:இண்டியா கூட்டணில் உள்ள 16 கட்சி தலைவர்கள், மல்லிகார்ஜுன கார்கேவை, பிரதமர் வேட்பாளராக்க ஒப்பு கொண்டனர். ஆனால், முதல்வர் சித்தராமையா மட்டும், ராகுல் பிரதமராக விரும்புகிறார்.கார்கே தலித் என்பதை விட, ஒரு கன்னடர் என்பதற்காகவாவது அவர் பிரதமர் வேட்பாளர் ஆகட்டும் என்று முதல்வர் கூறியிருக்கலாம். இதற்கு முன், தலித் சமுதாயத்தின் பரமேஸ்வர், முதல்வராவதை தடுத்தார்.நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும், கன்னடர் என்பதற்காக, கார்கே பிரதமர் வேட்பாளராக விரும்புகிறேன். அவரின் தியாகத்தால் தான் சித்தராமையா முதல்வராக இருக்கிறார்.தற்போது, ஜாதிக்கு ஒரு துணை முதல்வரை நியமிக்க முற்பட்டுள்ளனர். லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுக்க உள்ளது. நரேந்திர மோடி, பிரதமராவதை, &'இண்டியா&' கூட்டணி பார்க்கும்.பெங்களூரில் 80 ஆயிரம் கோடி ரூபாயில் சுரங்கப் பாதை அமைப்பதில், இரண்டு அமைச்சர்களிடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், மாநிலத்தில் வெளிநாடு முதலீடு குறைந்துள்ளது.பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதிலும், 10 - 15 சதவீதம் கமிஷன் முறைகேடு நடக்கிறது. அச்சக உரிமையாளர்களிடம் கமிஷன் பெறுகின்றனர். சிறுபான்மையினர் பெயரிலும் கொள்ளை அடிக்கின்றனர். சிலரை திருப்திபடுத்துவதற்காக, வாக்குறுதி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், எந்த பயனாளிகளுக்கும் சென்றடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்