உள்ளூர் செய்திகள்

மதுரை மீனாட்சியை தரிசிக்க சென்ற மாணவர்கள் ரயிலில் மீட்பு

நன்மங்கலம்: மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தைச் சேர்ந்தோர் தமிழாண்டி, 12, ஸ்ரீதர், 12, ஹேமன்ந்த், 12, பரத், 12. நண்பர்களான நால்வரும், நன்மங்கலம் அரசுப் பள்ளியில் ஏழாவது படிக்கின்றனர்.கடந்த 6ம் தேதி, வழக்கம்போல் பள்ளி சென்ற நால்வரும், மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அச்சமடைந்த பெற்றோர் எங்கு தேடியும், அவர்கள் கிடைக்கவில்லை.மாணவர்கள் மாயம் குறித்து, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், சிறுவர்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டன.போலீசாரின் துரித செயலால், சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில், நான்கு சிறுவர்களும் பயணிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் உதவியுடன், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிறுவர்கள் மீட்கப்பட்டு, நேற்று முன்தினம், பள்ளிக்கரணை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர்.விசாரணையில், சில வாரங்களுக்கு முன், சிறுவர்கள் நால்வரும், பள்ளி அருகே ஒருவரிடம் ஜோதிடம் பார்த்ததாகவும், அப்போது, மதுரை சென்று, மீனாட்சி அம்மனை தரிசித்து வந்தால், நன்றாக படிப்பு வரும் எனவும் ஜோதிடர் கூறியதாகவும் தெரிந்தது. இதனால், நால்வரும், மதுரைக்கு சென்றது தெரிய வந்தது.இதையடுத்து, இந்த வயதில் பெற்றோருடன் பாதுகாப்பாக செல்வதே சரியானது&' என, மாணவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார், நான்கு மாணவர்களையும் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்