உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்புக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் அச்சுறுத்தல் அல்ல: அமைச்சர் தியாகராஜன்

கோவை: ஏ.ஐ., தொழில்நுட்பம் ஒரு போதும், வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக, மனிதர்களுக்கு மாற்றாக இருக்காது. ஆனால், பணி செய்யும் விதம் மாற்றமடையும், என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பேசினார்.கோவை, இந்துஸ்தான் கல்லுாரியில், இந்திய தொழில்கூட்டமைப்பு யங் இந்தியன்ஸ் யுவா சார்பில், டிஜி 2.0 கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இதில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:வரும் காலங்களில் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோலோச்சும்; பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏ.ஐ., தொழில்நுட்பம் நிறைய செய்யும்; ஆனால் மனிதனால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் அல்ல.ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் மிகச் சில துறைகளில், வேலைவாய்ப்பு குறையலாம். ஆனால், முற்றிலும் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காது. பணி செய்யும் விதம் மாறும். கிரியேட்டிவிட்டி நம்முடையதாக இருக்கும். அதற்கு ஏ.ஐ., உதவும்; அவ்வளவுதான்.கல்வி முறைகளில் மாற்றம்கொலம்பியா, பிரவுன், ஹார்டுவர்டு உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலை கல்விமுறையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்.நீங்கள் உயர்கல்வியில் குறிப்பிட்ட துறையில், நிபுணத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க, முதலாண்டில் மனிதநேயம் குறித்த 5 பாடங்களை, கட்டாயம் படித்தாக வேண்டும். எதிர்காலம் இனி இப்படித்தான் இருக்கப் போகிறது. இவ்வாறு, அமைச்சர் தியாகராஜன் பேசினார்.இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் செயலாளர் சரஸ்வதி, சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் யுவா தென் பிராந்திய தலைவர் விஷால் மேத்தா, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.கோவைக்கு சிறந்த எதிர்காலம்கோவையைப் பொறுத்தவரை, தொழில்நுட்பத் துறையில் சிறப்பான எதிர்காலம் உள்ளது. ஹைடெக் சிட்டி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தின் 12,600 ஊராட்சிகளுக்கும் டான்பிநெட் வாயிலாக, இணைய சேவை வழங்கப்படும். இது, அனைத்து மக்களுக்கும் இணையவசதியை எளிதில் கையாள, உயர்தரத்திலான பாடங்களை, கல்வியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்க்க உதவும் என்றார் அமைச்சர் தியாகராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்