உள்ளூர் செய்திகள்

கல்வி இடைநிற்றலை தவிர்க்க முன்னாள் மாணவர்கள் கல்வித்துறை ஏற்பாடு

உடுமலை: தேர்வுக்கு ஆப்சென்ட் ஆன மாணவர்களை மறுதேர்வு எழுதவைக்க முன்னாள் மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டுமென கல்வித்துறை அறிவித்துள்ளது.அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டில் தற்போது கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை பெறுவது, மாணவர்களின் கற்றல் திறன்கள் குறித்து அறிவது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.இதற்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக அந்தந்த அரசு பள்ளிகளில் படித்த, முன்னாள் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கான வாட்ஸ் ஆப் குழுக்களும் நடப்பாண்டில் துவக்கப்பட்டுள்ளது.பள்ளியின் செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை என பல்வேறு தகவல்கள் குழுவில் பகிரப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.அதன் அடிப்படையில், தற்போது மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுக்கும் செயல்பாட்டிலும், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.பொதுத்தேர்வு எழுதி உயர்கல்விக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு, முறையான வழிகாட்டுதல், தேர்வுக்கு வராமல் தவிர்த்த மாணவர்களை மீண்டும் மறுதேர்வு எழுத ஊக்கப்படுத்துதல், உயர்கல்விக்கு தகுதியான கல்லுாரிக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் பங்கேற்க, விருப்பமுள்ள முன்னாள் மாணவர்களை பதிவு செய்வதற்கு, கல்விதுறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்