மாணவியருக்கு பாலியல் தொல்லை கலாஷேத்ரா மாஜி பேராசிரியர் கைது
சென்னை: சென்னையைச் சேர்ந்த, 42 வயதுடைய இரண்டு பெண்கள், திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நாட்டிய கல்லுாரியில் பரத நாட்டிய பிரிவில், 17 ஆண்டுகளுக்கு முன் பயின்றுள்ளனர்.இருவரும், சென்னை நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், தங்கள் கல்லுாரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா, 51, என்பவர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ஸ்ரீஜித் கிருஷ்ணா, கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், விருப்ப ஓய்வு பெற்று, சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியில் வசிப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், முதற்கட்ட விசாரணையில், முன்னாள் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீஜித் கிருஷ்ணாவை, நேற்று கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.