உள்ளூர் செய்திகள்

போலீசாரின் குழந்தைகளுக்கு பரிசு தொகை வழங்கிய கமிஷனர்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மருத்துவ உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், 16 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, மருத்துவ நிதியாக 30.77 லட்சம் ரூபாயை, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் வழங்கினார்.மேலும், 2023ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர் குழந்தைகள் 12 பேருக்கு, தமிழக அரசால் வழங்கப்படும், பரிசுத் தொகை 75.000 ரூபாயை வழங்கினார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்