உள்ளூர் செய்திகள்

பிஎச்.டி., படிப்புக்கு விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அழைப்பு

கோவை: பாரதியார் பல்கலையில், பிஎச்.டி., பகுதி நேரம் மற்றும் முழு நேர சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து, பாரதியார் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:பாரதியார் பல்கலையின் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலையால், அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், பிஎச்.டி., படிப்புக்கான பகுதி நேரம் மற்றும் முழு நேரம் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், www.b-u.ac.in இணையதளம் வாயிலாக, 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கு, விண்ணப்பக்கட்டணம் 1000 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கு, ஜாதி சான்றிதழ்களுடன் இணையவழி வாயிலாக செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரிக்கு 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள், ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த ஆராய்ச்சிப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், நேர்காணல் மற்றும் பாரதியார் பல்கலை சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறும்.மேலும் விபரங்களுக்கு, பல்கலையின் www.b-u.ac.in என்ற இணையதளத்தை காணலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்