வெற்றிகரமாக பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்
சென்னை: வான்வெளியிலிருந்து புவியை கண்காணிக்க, இஸ்ரோ அனுப்பிய செயற்கைக் கோள்கள், புவி வட்டப் பாதையில் நேற்று, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.நேற்று காலை, 9:19 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் கிளம்பியது.புறப்பட்ட 13:38 நிமிடத்தில், 475 கி.மீ., துார புவி வட்டப் பாதையில், 175.50 கிலோ எடை கொண்ட ஒரு செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில், 200 கிராம் எடை உடைய சிறிய செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட் மற்றும் இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக் கோள் திட்டம் வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த சக விஞ்ஞானிகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.எஸ்.எஸ்.எல்.வி., - டி310 முதல் 500 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. 1இ.ஓ.எஸ்., - 08இஸ்ரோவின் செயற்கைக்கோள்எடை - 175.50 கிலோ; ஆயுட்காலம் - ஓராண்டு.ஏந்திச் செல்லப்பட்ட கருவிகள்சாட்டிலைட் உதவியுடனான பகல் மற்றும் இரவு நேர கண்காணிப்புகளுக்கான கருவி, பேரிடர்கள் கண்காணிப்புக் கருவி, சுற்றுச்சூழல் கண்காணிப்புக் கருவி, தீ பரவலைக் கண்டுபிடிக்கும் கருவி, தொழிற்சாலை மற்றும் மின் ஆலைகளில் ஏற்படும் பேரிடர்களைக் கண்டுபிடிக்கும் கருவி மற்றும் எரிமலையைக் கண்டுபிடிக்கும் கருவி.இவை தவிர, அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகள்; இவை, கடல் காற்றின் வேகம், மண்ணின் ஈரப்பதம், இமயமலை தொடர் பனிப்பொழிவு, பெருவெள்ளம் கண்காணிப்பு உள்ளிட்ட தகவல்களை பெறக்கூடியவை.விண்வெளியில் புறஊதா, காமா கதிர்களை கண்காணிக்கும் பணியையும், இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோள் மேற்கொள்ளும். 'ககன்யான்' திட்டத்தில், விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவதற்கு இந்த ஆய்வு பெரிதும் உதவும்.2எஸ்.ஆர்., டெமோசாட் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின், சோதனை செயற்கைக்கோள்; எடை - 200 கிராம்.சென்னையின், எஸ்.ஆர்.எம்., பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். தகவல் தொடர்பு மற்றும் தங்கள் விண்வெளி ஆராய்ச்சிகளைப் பள்ளியிலிருந்தபடியே செய்ய, இந்த சிறிய சாட்டிலைட் வாயிலாக தகவல்களைப் பெற ஏதுவாக, சிறிய கருவிகளைப் பொருத்தியுள்ளனர்.இந்த செயற்கைக்கோளைத் தயாரித்த மாணவர்களும், பயன்படுத்தும் மாணவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.