மாநில நகைச்சுவைப்போட்டி; அரசு பள்ளி மாணவி தேர்வு
உடுமலை: மாநில அளவிலான கலை திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவிக்கு, கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்கான கலைத்திருவிழா போட்டி தற்போது மாவட்ட அளவில் நடக்கிறது. இதில், மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான நகைச்சுவை போட்டி நடந்தது.இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, தங்களின் திறன்களை வெளிப்படுத்தினர். அதில் குடிமங்கலம் ஒன்றியம் கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி மதிவதனா முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு, ஊராட்சித்தலைவர் சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பூங்கொடி, பள்ளித்தலைமையாசிரியர் தாயம்மாள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.