ஷார்ஜா மற்றும் துபாயில் மணிமேகலை புத்தக கண்காட்சி
சென்னை: மணிமேகலை பிரசுரத்தின் சார்பில், ஷார்ஜா, துபாய் நாடுகளில், ஒரு வார புத்தக விற்பனை கண்காட்சி நடக்க உள்ளது.தமிழின் பிரபல பதிப்பகமான மணிமேகலை பிரசுரம், தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் புத்தக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், வரும் 7ம் தேதி காலை, ஷார்ஜாவின் நகரத்தார் சங்கத்தில் புத்தக விற்பனை கண்காட்சியை துவக்க உள்ளது.அதைத்தொடர்ந்து, அன்று மாலை, துபாயில் உள்ள எமிரேட்ஸ் தியேட்டரில் நடக்கும் நடிகர் ரஜினியின், 75வது பிறந்த நாள் விழாவில், அவர் குறித்த புத்தக விற்பனை கண்காட்சியை நடத்த உள்ளது.மறுநாளான 8ம் தேதி துபாயின், பர் துபாயில் உள்ள காலித் பின் வாலீட் சாலையில் உள்ள எம்.டி.ஆர் உணகத்தின்மேல், புத்தக விற்பனை கண்காட்சியை துவக்க உள்ளது. இந்த கண்காட்சி, 15ம் தேதி வரையிலான ஒரு வாரத்துக்கு நடக்க உள்ளது.இதில், அந்துமணியின் கேள்வி பதில்கள் எட்டு பாகங்களும், பார்த்தது கேட்டது படித்தது நுாலின் 23 பாகங்களும், அமெரிக்காவில் அந்துமணி, ஆறு நாடுகளில் அந்துமணி, ஐந்து நாடுகளில் அந்துமணி, லட்சத்தீவில் அந்துமணி, அமைதிப்படையுடன் அந்துமணி, அந்துமணியுடனான எங்கள் பயணம், நாயகன் உள்ளிட்ட அனைத்துநுால்களும் இடம்பெற உள்ளன.