உள்ளூர் செய்திகள்

வானில் கோள்களின் அணிவகுப்பு ஆர்வமுடன் பார்வையிட்ட மக்கள்

புதுச்சேரி : வானில் ஒரே நேர் கோட்டில், கோள்களின் அணிவகுப்பில், சனி கோள் மிகவும் தெளிவாக இருந்ததை தொலை நோக்கி மூலம், மக்கள் பார்த்து வியப்படைந்தனர்.வானில், ஒரே நேர் கோட்டில், 6 கோள்களின் அணி வகுப்பை தொலை நோக்கி மூலம் பார்க்க, புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், உப்பளம் புதிய துறைமுகத்தில், இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.அறிவியல் இயக்ககத்தின் தலைவர் மதிவாணன் தலைமையில், துணை தலை வர் ஹேமாவதி, தொழில் நுட்பட ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ராஜா, ஆலோசகர் சேகர், மூத்த நிர்வாகி ஆனந்த் அஸ்டெல், ரமேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அதன்படி, நேற்று மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை, தொலை நோக்கி மூலம், மெர்குரி, வியாழன், அதனுடன் 5 துணை கோள்களும், வெள்ளி, யுரேனஸ், செவ்வாய், சனி ஆகிய கோள்கள் ஒரே நேர் கோட்டில், காணப்பட்டது. இந்த கோள்களை, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.இதுகுறித்து, துணை தலைவர் கூறுகையில், இந்த கோள்களின் ஒரே நேர் கோட்டில், அடுத்த மாதம் 25ம் தேதி வரை வானில் தெரியும். வெறும் கண்களால் பார்க்கலாம். மிகவும் துல்லியமாக தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும். இதில், நட்சத்திரங்கள் மின்னுவது கண்ணுக்கு தெரியும், ஆனால், கோள்கள் மின்னாமல் இயங்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்