உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி துறை கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறைக்கு மாற்றி உத்தரவு

சென்னை: உயர்கல்வித்துறை கட்டுமான பணிகளை, இனி பொதுப்பணித்துறை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து அரசு துறைகளின் கட்டுமான பணிகள், இனி பொதுப்பணித்துறை வாயிலாகவே மேற்கொள்ளப்படும் என, கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தற்போது, உயர்கல்வி துறைக்கான கட்டுமான பணிகளை, இனி பொதுப்பணித்துறை நேரடியாக மேற்கொள்ளும் என, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதேபோல, பொதுப்பணித் துறையில், கட்டட கலைப்பிரிவு, கொதிகலன் இயக்ககம் போன்றவை தனியாக இயங்கி வந்தன. இவையும், முதன்மை தலைமை பொறியாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இதற்கான உத்தரவை, பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்