யு.பி.எஸ்.சி., தேர்வர்களுக்காக நாளை ஊக்கத் தொகை தேர்வு
தேனி: தமிழக அரசு யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.7500 வீதம் 10 மாதங்கள் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு நாளை (ஜூலை 26) பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.இத்தேர்வு எழுத 333 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என 50 பேர் ஈடுபட உள்ளனர்.