உள்ளூர் செய்திகள்

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

புதுடில்லி: விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆக.18) சந்தித்து உரையாடினார்.இந்த சந்திப்பில், விண்வெளியில் சுபான்ஷு சுக்லா அனுபவித்த தருணங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் முன்னேற்றங்கள், மேலும் நாட்டின் பெரும் இலட்சிய திட்டமான ககன்யான் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமர், சுபான்ஷு சுக்லாவுடன் சிறப்பான உரையாடல் நடைபெற்றது. விண்வெளியில் அவரது அனுபவங்கள், அறிவியல் வளர்ச்சி, ககன்யான் திட்டம் குறித்து பேசினோம். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டார்.இந்த சந்திப்பு, இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் எதிர்கால விண்வெளி முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்