உள்ளூர் செய்திகள்

தேசிய ஏகலைவா பள்ளி மாணவர்களின் கலாச்சாரத் திருவிழா

ஆந்திரப்பிரதேசம்: குண்டூர் மாவட்டம் வட்டேஸ்வரம் கே.எல். பல்கலைக்கழகத்தில், 6-வது தேசிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் கலாச்சாரம் மற்றும் எழுத்தறிவு திருவிழா இன்று தொடங்கியது. மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் இந்நிகழ்ச்சியை முறையாக தொடங்கி வைத்தார்.ஆந்திரப்பிரதேச பழங்குடியினர் நலன் உண்டு உறைவிடக் கல்வி நிலைய சங்கம் மற்றும் தேசிய பழங்குடியினர் கல்வி சங்கம் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகின்றன. இந்திய பழங்குடியினர் சமூகத்தின் பன்முகப் பண்பாட்டை கொண்டாடியும், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் மத்திய அரசின் உறுதியை வலியுறுத்தியும் இந்த ஆண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.35-க்கும் மேற்பட்ட கலாச்சார, எழுத்தறிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்கும் இந்த விழா, அவர்களின் ஒட்டுமொத்த திறன்களை வெளிப்படுத்தும் தேசிய அளவிலான மேடையாக விளங்குகிறது.நாடு முழுவதும் உள்ள ஏகலைவா மாதிரி பள்ளிகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான பழங்குடியினர் மாணவர்கள் பங்கேற்கும் இவ்விழா, சமூகத்தின் ஒற்றுமையும் பண்பாட்டு வளமும் பிரதிபலிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்