உள்ளூர் செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பு ரூ.2,021 கோடியானது

மதுரை: மதுரை மாவட்டம், தோப்பூரில், 221 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்தின் திட்ட மதிப்பு, 1,978 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது, 2,021 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.டிசம்பர், 2018ல், 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான திட்டத்திற்கான ஒப்புதல் தரப்பட்டு, 2024ல் கட்டுமான பணிகள் நிறைவடையும் என, தெரிவிக்கப்பட்டது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.டெண்டர் அறிவிப்புஇங்கு, 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய்ப் பிரிவு கூடுதலாக துவக்குவதன் காரணமாக, திட்ட மதிப்பீடு, 1,264 கோடி ரூபாயில் இருந்து, 1,977.8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இத்தொகையில், 82 சதவீதம் அளவு, 1,627 கோடி ரூபாயை, ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனம் கடன் தருகிறது.மூன்றாண்டுகளாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று, 150 மாணவர்கள் ராமநாதபுரத்தில் படிக்கின்றனர். 2023 ஆகஸ்ட் 17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை, எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.எல் அண்டு டி நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2024 மார்ச் 14ல் கட்டுமான முன் பணிகளை துவக்கியது. கட்டுமான திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை மே 2ம் தேதி எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது.சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என, மே 10ல் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில், மே 20ல் கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது.எல் அண்டு டி நிறுவனம் கட்டுமான பணிகளை துவங்கியதாக, மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.உயர்ந்தது தொகைஅந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:எல் அண்டு டி நிறுவனத்திற்கு மே 4ல் மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. குறைந்தபட்ச தொகையாக இந்த நிறுவனம், 1,118.35 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியது. தற்போது கட்டுமான திட்டத்தின் மதிப்பு, 1,978 கோடி ரூபாயிலிருந்து 2,021 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்