அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் வளர்ச்சியில் தமிழ்நாடு- அலுமெக்ஸ் 2025 சிறப்புக் காட்சி
சென்னை: அலுமினிய உற்பத்தி மற்றும் எக்ஸ்ட்ரூஷன் துறையில் தமிழ்நாடு வலுவான மாநிலமாக உருவெடுத்து வருகிறது. வாகனம், கட்டுமானம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளுக்கான அலுமினிய தயாரிப்புகளில் மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது.இந்த வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில், அலுமெக்ஸ் இந்தியா 2025 என்ற அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் 13 வரை புதுடில்லியில் நடைபெறுகிறது. இந்திய அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் உற்பத்தியாளர்கள் சங்கம் (அலிமய்) ஏற்பாடு செய்யும் இந்த கண்காட்சியில், உலகளாவிய அளவில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 12,000-க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள் வருகை தர உள்ளனர்.அலிமய் தலைவர் ஜிதேந்திர சோப்ரா கூறுகையில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், துறைமுக வசதி ஆகியவற்றால் தமிழ்நாடு, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு சேவை செய்ய சிறந்த நிலையில் உள்ளது என்றார்.தற்போது இந்தியாவின் அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் சந்தை 8.39 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது 2035-ஆம் ஆண்டில் 22.5 பில்லியன் டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கப்போவதாக குறிப்பிடப்படுகிறது.ஆனால் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தாழ்வு, அதிகரிக்கும் எரிசக்தி செலவுகள் மற்றும் மலிவான இறக்குமதிகள் போன்ற சவால்கள் துறையின் நீண்டகால வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.அலுமெக்ஸ் இந்தியா 2025-இல் பசுமை எக்ஸ்ட்ரூஷன், எம்எஸ்எம்இக்களுக்கு அரசாங்க ஆதரவு, தொழில்நுட்ப உள்ளூர்மயமாக்கல் போன்ற தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன. ஹிண்டால்கோ, வேதாந்தா, ஜேஎன்ஏஆர்டிடிசி மற்றும் எம்எஸ்எம்இ அமைச்சகம் இந்த கண்காட்சியை ஆதரிக்கின்றன.மேலும் விவரங்களுக்கு: www.alumexindia.com