உள்ளூர் செய்திகள்

பிற மொழி வாரியாக முதல் மதிப்பெண் விவரம்

பிற மொழியை மொழிப் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம் இங்கே தரப்பட்டுள்ளது. மாநில அளவில் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்த கே. சந்தியா 1191 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அடுத்ததாக தமிழ் மொழியைப் படித்த கே. ரேகா (ஓசூர்), பிரெஞ்சை தேர்வு செய்து படித்த வி.ஆர். ஜெயப்பிரதா(தி.நகர்)  ஆகியோர் 1190 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தைப் பிடித்துள்ளனர். கீழ்கட்டளையைச் சேர்ந்த எஸ். மகாலட்சுமி பிரெஞ்ச் மொழியைத் தேர்வு செய்து படித்து 1189 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் அனைவரும் மாணவிகளே என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்