கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகப் பயிற்சியாளர்கள்
இந்திய அரசின் ஷெட்யூல் 'ஏ' பிரிவைச் சார்ந்த நவரத்னா பொதுத் துறை நிறுவனங்களுள் கோல் இந்தியா நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். எரிசக்தி துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1080 மேனேஜ்மெண்ட் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்னென்ன பிரிவுகள்கோல் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளான மைனிங், எலக்ட்ரிகல், மெக்கானிகல், சிவில், கெமிக்கல்/மினரல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளிலும், சிஸ்டம், என்விரான்மெண்ட், ஜியாலஜி அண்டு ஜியோபிசிக்ஸ், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட், நிதி, பெர்சானல் அண்டு எச்.ஆர்., சேல்ஸ் அண்டு மார்க்கெடிங், இந்தி ராஜ்பாஷா ஆகிய பிரிவுகளின் கீழ் மேனேஜ்மென்ட் டிரெய்னி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது31.03.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களே கோல் இந்தியா நிறுவனத்தின் டிரெய்னி இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதிபிரிவு வாரியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். சிஸ்டம் பிரிவிற்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கை படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவிற்கு விண்ணப்ப்பிக்கலாம். இந்தப் பிரிவுக்கும் பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்விரான்மெண்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 69 சதவிகித மதிப்பெண்களுடன் என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துறையில் முது நிலைப் பட்டப்படிப்பு அல்லது முது நிலை டிப்ளமோ படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ், அப்ளைடு ஜியாலஜி/ஜியோபிசிக்ஸ் படிப்பில் முது நிலைப் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன்முடித்தவர்கள் அந்த பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரிகல் அல்லது மெக்கானிகல் இன்ஜினியரிங் பட்டம் முடித்து அதன் பின் எம்.பி.ஏ., அல்லது பி.ஜி.டி.ஐ.எம்., படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதிப் பிரிவுக்கு சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., முடித்தவர்களும், பெர்சானல் அண்டு எச்.ஆர்., பிரிவுக்கு எம்.பி.ஏ., வில் தொடர்புடைய துறையில் பட்டம் முடித்தவர்களும், சமூக அறிவியல், லேபர் வெல்பேர், பெர்சானல் மேனேஜ்மென்ட் பிரிவுகளில் பி.ஜி., டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மார்க்கெடிங் பிரிவுக்கு எம்.பி.ஏ., அல்லது பி.ஜி.டி.எம்., படிப்பில் மார்கெடிங் பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜ்பாஷாஇந்தி பிரிவுக்கு இந்தி மொழியில் எம்.ஏ., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர தகவல்கள்இந்தப் பதவிக்கு அகில இந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ரூ.500/க்கான டி.டி.,யை "Coal Indial Limited" என்ற பெயரில் கோல்கட்டாவில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டுடன் டி.டி., மற்றும் இதர ஆவணங்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். முகவரிChief Manager(Personnel & Recruitment ),Coal India Limited,10 NS Road, Post Bag No.43, GPO Kolkatta - 700001. ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.06.2011விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 13.06.2011இணைய தள முகவரி: https://www.coalindia.in/Career/AdvDocs/1/recruitment_advt.pdf