உள்ளூர் செய்திகள்

வேளாண் குடும்ப மாணவர்களுக்கு உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு

உழவ‌ர் பாதுகா‌ப்பு ‌‌‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ஐடிஐ, பா‌லிடெ‌க்‌னி‌க் மற்றும் ப‌ட்ட‌ப்படி‌ப்பு‌க்கு ஆ‌ண்டு‌க்கு ரூ.1,250 முத‌ல் ரூ.1,950 வரை வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று முதல்வர் கூ‌றியு‌ள்ளா‌ர். இள‌ங்கலை ப‌ட்ட‌ப்படி‌க்கு ‌ஆ‌ண்டு‌க்கு ரூ.1,750 முத‌ல் ரூ.2,500 வரை‌யு‌‌ம், முதுகலை படி‌ப்பு‌க்கு ரூ.2,250 முத‌ல் ரூ.3,750 வரையு‌ம் வழ‌ங்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்றும் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ச‌ட்ட‌ம், பொ‌றி‌யிய‌ல், மரு‌த்துவ‌ம் படி‌க்கு‌ம் வேளாண் குடு‌ம்ப மாணவ‌ர்களு‌க்கு‌ம் ‌நி‌தியுதவ‌ி வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். அத‌ன்படி இள‌ங்கலை படி‌ப்பு‌க்கு ரூ.2,250 முத‌ல் ரூ.4,750 வரையு‌ம், முதுகலை படி‌ப்பு‌க்கு ரூ.4,250 முத‌ல் ரூ.6,750 வரை வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் முதல்வர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர். இத்திட்டத்தின் கீழ் நன்மையடையும் மாணவர்கள், ஏற்கனவே வேறு பல திட்டங்களின் கீழ் அரசின் சலுகைகளை அனுபவித்து வந்தாலும், அவை நிறுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்