பல்கலை. ரேங்க் பெற்றவர்களுக்கு யு.ஜி.சி கல்வி உதவித்தொகை
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) சார்பில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இளநிலை பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் இரண்டு இடங்களில் தேர்ச்சி பெற்று, தொழிற்படிப்பு அல்லாத முதுநிலை பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு யுஜிசி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் 2011-12 கல்வியாண்டுக்கான அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை மேற்கொண்டு பல்கலைக்கழக அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள், விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 2011-12 கல்வியாண்டில் முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை www.ugc.ac.in/urh என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப்டம்பர் 30௦ கடைசி தேதியாகும். இது குறித்த விவரங்களை www.ugc.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.