வேளாண் பல்கலை பட்டமளிப்புவிழா: தமிழக ஆளுநர் பங்கேற்பு
கோவை: கோவை வேளாண் பல்கலையின் பட்டமளிப்பு விழா வரும் 22ல் நடைபெறவுள்ளது. விழாவுக்கு ஆளுநர் ரோசய்யா தலைமை ஏற்கிறார். பல்கலையின் பட்டமளிப்பு விழா அரங்கில், காலை 11.00 மணியளவில் நடைபெறுகிறது. 678 மாணவர்கள் நேர்முகமாகவும், 284 மாணவர்கள் தபால் மூலமாகவும் படித்து பட்டங்களை பெறவுள்ளனர். வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு வேளாண் விருதுகளை அறிவிக்கிறார். மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி ரங்கன், ஆந்திர அரசின் மறுவாழ்வு மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்புத்துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி, சென்னை ஆரூரான் சர்க்கரை நிறுவனத்தின் தலைவர் தியாகராஜன் ஆகியோர், கவுரவ டாக்டர் பட்டம் பெறவுள்ளனர்.