உள்ளூர் செய்திகள்

அனைத்து துறைகளையும் நானோ தொழில்நுட்பம் ஆக்ரமிக்கும்-கலாம்

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஏ.பி.ஜே. அப்துல் கலாம், மாணவர்களுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கிப் பேசினார். இன்றைய காலத்தில் ஒரு தொழில்நுட்பம் இன்னொரு தொழில்நுட்பத்துடன் இணைந்து மற்றொரு தொழில்நுட்பமாக உருமாறி வருகிறது. தகவல் தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போது நானோ தொழில்நுட்பம் வந்துள்ளது. எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம்தான் ஆக்ரமித்து கொண்டிருக்கும். மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், மருந்து உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். நானோ தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக நானோ ரோபோக்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் மருத்துவ துறையில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். நோய் பாதித்த பகுதிக்குள் ஊசி மூலமாக உடலின் உள்ளே செலுத்தப்படும் நானோ ரோபோக்கள் நோயை குணப்படுத்தி உள்ளேயே ஜீரணமாகிவிடும். காரணம் நானோ ரோபோ என்பது டி.என்.ஏ.வால் உருவாக்கப்படும் ஒரு மிக நுண்ணிய பொருளாகும். இதற்கான ஆராய்ச்சி தென்கொரியாவில் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதை ஆய்வகத்தில் நான் நேரிலேயே கண்டேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்