உள்ளூர் செய்திகள்

நிலையான உணவு உற்பத்தி குறித்த தேசியக் கருத்தரங்கு

சென்னை: கோவை, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நிலையான உணவு உற்பத்தி குறித்த CONFOTECH&'11 தேசியக் கருத்தரங்கு வரும் அக்., 17ம் தேதி நடக்கிறது. பல்கலை., சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழகத்தின் உணவு தயாரித்தல் மற்றும் பதப்படுத்துதல் தொழில்நுட்பத்துறை சார்பில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. உலக உணவு தினம் கொண்டாடப்படுவதன் மூலம் மக்களிடையே, பெருகி வரும் உணவுத்தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது. உணவுப்பொருள் உற்பத்தி; அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்தல்; சிப்பமிடுதல், இருப்பு வைத்தல் போன்றவற்றின் போது ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்தல்; உணவுப்பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைத்தல், பதப்படுத்துதல், இயந்திரமயமாக்கல், தானியங்கி மயமாக்கல் போன்ற துறைகளில் இன்னும் வளர்ச்சி தேவை.இதுகுறித்த தேசிய கருத்தரங்கு நடக்கிறது. இக்கருத்தரங்கில், Indigenous Traditional Practices of Crop Processing, Mechanization and Automation of Food Industry, Management of Post Harvest Losses, Packaging and Storage, Food Safty and Quality Control, Waste Management and Bio Remediation Bio Sensors and Image Processing என்ற பொருள்களில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். ஆய்வுக்கட்டுரைகள் தாள் மற்றும் பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் முறையில் இருக்க வேண்டும்.விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் உணவு தயாரித்தல், பதப்படுத்தல் பொறியியல் - உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம். அறிக்கைகளைச் சமர்ப்பிக்க செப்., 25ம் தேதி இறுதிநாள் ஆகும். கூடுதல் விவரங்களை confotech2011@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம் அல்லது http://www.avinuty.ac.in/ இணையதளத்தைப் பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்