இந்திய ராணுவத்தில் குறுகிய கால நிலை அதிகாரி
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் அளவிலும், தொழில் நுட்ப ரீதியிலும் சர்வ தேச தரம் பெற்றது. இதில் டெக்னிகல் பிரிவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் துவங்கவிருக்கும் பணி சார்ந்த படிப்பிற்கு குறுகிய கால நிலை அடிப்படையில் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது:இந்திய ராணுவத்தின் குறுகிய கால நிலை (டெக்னிகல்) பிரிவிற்கு விண்ணப்பிக்க 20 வயது நிரம் பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.04.1985 முதல் 01.04.1992க்குள் பிறந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதர தேவைகள்:இந்திய ராணுவத்தில் நேரடிப் பணி என்பதால் சில குறைந்த பட்ச உடல் தகுதிகள் கட்டாயம் தேவைப்படும். உயரம் குறைந்த பட்சம் 157.5 செ.மி.,யும், இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில், எலக்ட்ரிகல், மைனிங், ஆட்டோமொபைல், மெக்கானிகல், புரொடக்சன், ரப்பர் டெக்னாலஜி, கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்சர், புட் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ஆகியவற்றில் படித்தவர்கள் இந்திய ராணுவத்தின் குறுகிய கால நிலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். பிற விபரங்கள்:இந்தப் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை எடுத்து பின்வரும் முகவரிக்கு 26.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது Online Application SSC(T)-38 And the Roll No :____" என்று குறிப்பிட வேண்டும். முகவரி:Additional Directorate General of Recruiting (Rgt&6),TES Selection, West Block-3,RK Puram, New Delhi -110006. இணையதள முகவரி: www.joinindianarmy.nic.in விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 26.10.2011