இந்த ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆய்வு பூங்கா!
இந்த ஆய்வுப் பூங்காவின் முதல் கட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தொழில் நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆய்வுப் பூங்கா இருக்கும். அதற்கேற்ற வகையில் தொழில் நிறுவனங்கள், ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து செயல்படும் என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் எம்.எஸ். அனந்த் தெரிவித்தார். ரங்கநாதன் சென்டர் பார் இன்பர்மேஷன் ஸ்டடீஸ், எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி ஆகியவை ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில், உலகமயமாக்கல் யுகத்தில் புத்தாக்க முயற்சிகள் என்பது குறித்து பேசும்போது இதுகுறித்துத் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு, எம்.ஐ.டி., கல்வி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுப் பூங்காக்களைப் போல இதுவும் வெற்றிகரமாகச் செயல்படும் என எதிர்பார்ப்பதராக அவர் குறிப்பிட்டார்.