உள்ளூர் செய்திகள்

இந்து சமய கலைக்களஞ்சியம் அமெரிக்காவில் இன்று வெளியீடு

வாஷிங்டன்: இந்து சமயத்தின், பிரமாண்ட கலைக்களஞ்சியம், அமெரிக்காவில், இன்று வெளியிடப்படுகிறது. இந்து சமயத்தின் நம்பிக்கைகள், மத நெறிமுறைகள், தத்துவம் உட்பட 7,000 தலைப்புகளில், இந்தக் கலைக்களஞ்சியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய, 1,000 அறிஞர்களால், கடந்த, 25 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தது. மொத்தம், 11 தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கலைக் களஞ்சியத்தில், இந்திய வரலாறு, நாகரிகம், மொழி, கட்டடக்கலை, இசை, நடனம், கலை, மருத்துவம், அறிவியல் மற்றும் சமூக அமைப்புகள், மதம், பக்தி, இந்து பெண்ணின் கடமை என, பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், இந்து மரபுகள் மற்றும் கலாசாரம் குறித்த, 1,000க்கும் மேற்பட்ட படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்திய கலாசார ஆராய்ச்சி மையம், வடிவமைத்துள்ள இந்த கலைக் களஞ்சியத்தை, "மண்டலா" பதிப்பகம் வெளியிடுகிறது. உலகிலேயே, மிகவும் பழமையான மதமான இந்து மதம் குறித்த அத்தனை தகவல்களும் இடம் பெற்றுள்ள, இந்த பிரமாண்ட கலைக்களஞ்சியம், அமெரிக்காவின், கரோலினா பல்கலைக்கழகத்தில், இன்று நடைபெறும் விழாவில், வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் நிபுணர், ராஜேந்திர பச்சோரி, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே, சுவாமி சிதானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்