உள்ளூர் செய்திகள்

சென்னையில் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் உலக மாநாடு!

ஐ.ஐ.டி.க்களில் படித்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் 3 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரக மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து நாட்டின் கொள்கை வகுக்கும் பொறுப்பில் உள்ள முக்கிய பிரமுகர்களும் நிபுணர்களும் பங்கேற்கிறார்கள். ராஜ்குப்தா, குருராஜ் தேஷ்பாண்டே, என்.ஆர். நாராயணமூர்த்தி, நந்தன் நீல்கனி, அஷங்தேசாய், பிரதீப் குப்தா ஆகியோர் 2002ம் ஆண்டில் அனைத்து ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் அமைப்பை ஏற்படுத்தினர். நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பணியாற்றுவதற்கான களமாக அனைத்து ஐ.ஐ.டி, முன்னாள் மாணவர்கள் அமைப்பு இருக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளன.டிசம்பர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி., பொன் விழா நிகழ்ச்சியையொட்டி, இந்த முன்னாள் மாணவர்கள் மாநாடும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்