உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் பேராட்டம்: கல்லூரிக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

வால்பாறை: கல்லூரி மாணவி தற்கொலையை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், வால்பாறை கல்லூரிக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை, ஈட்டியார் எஸ்டேட்டில் பணியாற்றி வருபவர், சின்னக்கண்ணு - மணிமேகலையின் மகள், சங்கீதா, 18. வால்பாறை, பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கலை, அறிவியல் கல்லூரியில், பி.காம்., முதலாமாண்டு, படித்து வந்தார். கடந்த, 6ம் தேதி, கல்லூரிக்கு சென்ற சங்கீதாவை, உதவிப் பேராசிரியர் சின்ன மாரிச்சாமி திட்டியதாகவும், அதனால், வீட்டில், தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவான உதவி பேராசிரியரை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அக்கல்லூரி மாணவர்கள், உதவிப் பேராசிரியரை கைது செய்யக் கோரி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரிக்கு, நேற்று முதல், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் ரமேஷ் கூறுகையில், "புகாருக்குள்ளான உதவிப் பேராசிரியர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, வரும், 16ம் தேதி வரை, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்