கனமழை: பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மத்திய மேற்கு வங்கக் கடலில், கடலோர ஆந்திராவில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மூன்றாவது நாளாக, அதே இடத்தில் நீடிக்கிறது. மேலும், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட, காற்று சுழற்சியால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரியில் பயங்கர இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், மழை பெய்தது. கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று (12ம் தேதி) விடுமுறை அளிக்கப்படும். இன்று நடைபெறவிருந்த, காலாண்டு தேர்வு, கடைசி தேர்வுக்கு பின் நடத்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.