தமிழ்ப் பல்கலை நூலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் ஆய்வு
அதன் பின் அவர் கூறியதாவது: கடந்த மூன்றாண்டுகளில் தமிழ் பல்கலைக்கழகம் பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொண்டுள்ளது. தற்போது 56 ஆய்வுத் திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இங்கு, பதிப்புத்துறை வாயிலாக 26 நூல்களும், நான்கு காலாண்டு ஆய்விதழ்கள் மூன்றாண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு நிதியில் மூன்று கோடியே இரண்டு லட்சம் ரூபாய் பெறப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது. பல்கலைக்கழகம் மூலம் திருக்குறள், பாரதி, பாரதிதாசன் பாடல்கள், சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இதில் திருக்குறள் மொழிபெயர்ப்பு பணி முடிவடைந்து அச்சில் உள்ளது. மேலும் சித்த மருத்துவம், சுற்றுச்சூழல் மூலிகை அறிவியல் துறைகளில் காப்புரிமை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் 12ம் ஐந்தாண்டுத் திட்டத்தில், துறைசார் அறிவியல் களஞ்சியங்கள் வெளியிட நான்கு கோடி ரூபாய் கல்வெட்டியல் ஆய்வு மற்றும் பயிற்சி மையம் அளிக்க ஆறு கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஓலைச்சுவடி உயராய்வு அமைக்க 10 கோடி ரூபாய் மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மகால் நூலகம், கலைக்கூடம், மாவட்ட மைய நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜராம், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் சேகர், கலெக்டர் சுப்பையன், பல்கலை துணை வேந்தர் திருமலை உட்பட பலர் பங்கேற்றனர்.