நந்தா பல்தொழில் நுட்ப கல்லூரியில் வளாகத் தேர்வு
ஈரோடு: ஈரோடு நந்தா பல்தொழில் நுட்ப கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, பயோகான் நிறுவனம் மூலம் வளாகத்தேர்வு நடந்தது. ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். நந்தா பொறியியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பயோகான் நிறுவன மனிதவள மேலாளர் மேகா பேசியதாவது: எங்கள் நிறுவனம், பல்வேறு ஆராய்ச்சி மூலம், உயிரியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், தலை மற்றும் கழுத்துப்பகுதியில் உண்டாகக் கூடிய புற்றுநோய்களை அழிக்கும் மருந்துகளை, உற்பத்தி செய்து வருகிறோம். எங்கள் உற்பத்தி, தரத்தை அதிகரிக்க, இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்க வந்துள்ளோம், என்றார். பின், வளாகத்தேர்வு சம்மந்தமான மாணவர்களின் கேள்விகளுக்கு, பதில் அளித்தார். ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மற்றும் கோவை பகுதிகளில் செயல்பட்டு வரும், வெவ்வேறு பல்தொழிநுட்ப கல்லூரிகளில் இருந்து, 290க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முதலில் எழுத்துத் தேர்வும், பின், நேர்முகத் தேர்வும் நடந்தது.