ஐ.ஏ.எஸ்., ஆவது குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பு: இறையன்பு
மதுரை: &'&'தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஆவது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது,&'&' என, அண்ணா மேலாண்மை மைய இயக்குனர் இறையன்பு தெரிவித்தார். மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பல்வேறு அரசு துறை ஊழியர்களுக்கு, அண்ணா மேலாண்மை மையம் மூலம் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குரூப் அ மற்றும் ஆ பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் பவானிசாகர் பயிற்சி மையத்தில், 36.23 கோடி ரூபாயில் புதிய கட்டட வசதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1984ல் துவங்கப்பட்ட அண்ணா மேலாண்மை நிலையம் சார்பில், ஆண்டுதோறும், 300 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தாண்டு தான் அதிகபட்சமாக, 57 பேர் தேர்வாகியுள்ளனர். இப்பயிற்சியில் பங்கேற்க, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு, செப்டம்பரில் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஆவது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இவ்வாறு, இறையன்பு கூறினார்.