உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திண்டுக்கல்: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 37 ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதிகள், 3 கல்லூரி விடுதிகள், ஒரு ஐ.டி.ஐ., விடுதி, 2 பழங்குடியினர் நல பள்ளி விடுதிகள், 6 பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களும் சேரலாம். ஒவ்வொரு விடுதியிலும், இலங்கை தமிழர்களின் குழந்தைகள் 5 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். குடியிருக்கும் பகுதியில் இருந்து கல்வி நிலையத்தின் தொலைவு 8 கி.மீ.க்குள் இருக்க வேண்டும். இந்த விதிமுறை மாணவிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் உள்ள விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம், ரேஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை இணைத்து சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்