உள்ளூர் செய்திகள்

காலி பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு

பள்ளிக் கல்வித்துறையில் உள்ள தேர்வுத்துறையில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு, 25 வகையான தொழில் நுட்ப தேர்வுகள் உட்பட ஆண்டு தோறும் 42 வகையான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் ஆண்டுதோறும் 35 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த தேர்வுத்துறையில் அதிகாரிகள் நிலையில் 30 பணியிடங்களும், 800 பணியாளர்களின் பணியிடங்களும் உள்ளன. இதில் ஏழு மண்டல செயலாளர்கள், மூன்று துணை இயக்குனர்கள், இரண்டு கூடுதல் செயலாளர்கள் உட்பட 20 அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் உட்பட 200 பணியாளர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன. இவ்வளவு அதிகாரிகள், பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தேர்வு முடிவு களை வெளியிடுவதில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்